Monday, June 16, 2014

நல்லாட்சியின் கொள்கைகள்

நல்லாட்சி என்பதே தற்போது அனைவரும் உச்சரிக்கும் வார்த்தை.


சிறந்த இந்திய அரசாங்கத்தையும், நல்லாட்சியை கட்டமைப்பதற்கான கூட்டு முயற்சியில் நாம் இறங்கலாமா? நம் நாட்டின் ஆட்சிக்கான அனைத்து அம்சங்களும் இதில் அடங்கியிருக்கும். இதற்கான இணையத் தேடலில், சிங்கப்பூர் அரசாங்கம் குறித்த ஒரு ஆவணத்தைக் கண்டேன்.

இந்த ஆவணம், பன்முகத் தன்மை வாய்ந்த இந்திய அரசாட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு பொருந்தமானதாக உள்ளது. இந்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது மனதில் ஏற்றிக் கொண்டு செயல்படத்தக்க வகையில் சிறப்பாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. இது நாட்டிற்குத் தேவையானவற்றை செய்திட உதவுவதோடு, தன்னிறைவான மனதோடு அவர்களைப் பணியாற்றவும் வைக்கிறது.

இந்தியாவில் நல்லாட்சிக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முன்னுரிமைகளுக்கான உதாரணங்கள்

1. கலாச்சாரம், மொழி, மதம், கல்வி, பொருளியல் என அனைத்திலுமுள்ள பிரிவினைகள்
2. பிறப்பு இறப்பு பற்றிய புள்ளி விவர ஆய்வு
3. கூட்டாட்சி
4. நல்லாட்சியின் வரலாறு மற்றும் மரபுரிமை

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நல்லாட்சியும், சிறந்த அரசாங்கமுமே இந்தியாவின் தற்போதைய தேவையாகும்.

இந்தியாவின் வலு அதன் அரசாங்கத்தையும், அந்த அரசை வழிநடத்தும் மக்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த அரசின் நீண்ட கால செயல்திட்டங்கள், வழிமுறைகள், மற்றும் இதன் வழுவாத நீதி, சமூக மற்றும் கலாச்சார அடையாளம், அரசினால் தீட்டப்படும் கொள்கைகள், செயல்கள் அனைத்தும் இந்தியர்களின் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும்.